இங்கிலாந்து அரச குடும்பத்தின் கடைசி பெரிய கெட்-டு-கெதர் நிகழ்வு…ஹாரி-மேகன் தம்பதி பங்கேற்பு

 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் கடைசி பெரிய கெட்-டு-கெதர் நிகழ்வு…ஹாரி-மேகன் தம்பதி பங்கேற்பு

இங்கிலாந்து அரச குடும்பத்தின் கடைசி பெரிய கெட்-டு-கெதர் நிகழ்வில் ஹாரி-மேகன் தம்பதியினர் கலந்து கொண்டனர்.

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தின் கடைசி பெரிய கெட்-டு-கெதர் நிகழ்வில் ஹாரி-மேகன் தம்பதியினர் கலந்து கொண்டனர்.

லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள காமன்வெல்த் சேவை ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இந்தாண்டு இந்த நிகழ்வில் ராணி எலிசபெத் உடன் ஹாரி- மேகன் தம்பதி, அவரது மூத்த சகோதரர் வில்லியம் மற்றும் மனைவி கேட் மற்றும் தந்தை இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் ஒன்றாக கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்துடன் இணைந்து பங்கேற்கும் கடைசி பெரிய கெட்-டு-கெதர் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ttn

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் புறப்படுவதற்கு முன்பு கடைசி குடும்பக் கூட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடி கடைசி சில மாதங்களாக கனடாவில் அதிக நேரத்தை செலவிட்டனர். இந்த நிலையில், இந்த விழாவுக்காக அவர்கள் மீண்டும் இங்கிலாந்து திரும்பியுள்ளனர்.