இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு ரெடி: அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு!

 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு ரெடி: அரண்மனை நிர்வாகம் அறிவிப்பு!

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரிக்கும் அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலுக்கும் கடந்த மே மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அதன்பின், மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாகப் பலமுறை வதந்திகள் பரவியது. ஆனால், அந்த தகவல்களை அரண்மனை நிர்வாகம் மறுத்திருந்தது.

இந்நிலையில், கென்சிங்டன் அரண்மனையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சசெக்ஸ் அரண்மனையின் இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருக்கிறார். வருகின்ற 2019 இளவேனிற்காலத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதை இளவரசரும், இளவரசியும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.