இங்கிலாந்து அரசகுடும்பத்தில் குழப்பம், தனிக்குடித்தனம் போகும் தம்பி: புது வீட்டின் இந்திய கனக்‌ஷன்!

 

இங்கிலாந்து அரசகுடும்பத்தில் குழப்பம், தனிக்குடித்தனம் போகும் தம்பி: புது வீட்டின் இந்திய கனக்‌ஷன்!

உலகிலேயே வயதான இளவரசரான சார்லஸுக்கும், கார்விபத்தில் இறந்துபோன டயானாவுக்கும் இரண்டு பிள்ளைகள்.மூத்தவர் வில்லியம்,தம்பி ஹாரி.தாயின் மரணத்துக்கு பிறகு பாட்டி எலிசபெத் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில்தான் இரண்டு குட்டி இளவரசர்களும் வளர்ந்தார்கள்

உலகிலேயே வயதான இளவரசரான சார்லஸுக்கும், கார்விபத்தில் இறந்துபோன டயானாவுக்கும் இரண்டு பிள்ளைகள்.மூத்தவர் வில்லியம்,தம்பி ஹாரி.தாயின் மரணத்துக்கு பிறகு பாட்டி எலிசபெத் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில்தான் இரண்டு குட்டி இளவரசர்களும் வளர்ந்தார்கள்.

இருவருமே தங்கள் நாட்டு ராணுவத்தின் குதிரைப்படையில் சேர்ந்தார்கள். மூத்தவர் வில்லியம் அங்கிருந்து விலகி விமானப்படையில் சேர்ந்து போர்விமானி ஆனபோது அவருக்கும் கேத்தரின் மிட்டில்டனுக்கும் வெஸ்ட்மினிஸ்ட்டர் அபேயில் வைத்து உலகை திரட்டி திருமணம் நடத்தினார் இங்கிலாந்து ராணி.

வில்லியம் கேட் மிட்டில்டன் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான் தம்பி தம்பி ஹாரிக்குத் திருமணம் நடந்தது.வில்லியம் மனைவி கேட் மிட்டில்டன் ராஜ குடும்பத்து பெண்.தரையில் கால் படாமல் அரண்மணைகளில் வளர்ந்த இளவரசி.

william films

ஆனால், ஹாரியை மணந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நுழைந்த மேகன் மார்க்கெல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்.அதோடு நடிகையும் கூட.மேகன் சுதந்திரமான பெண். கட்டுப்பாடுகள் அற்று வளர்ந்தவர்.இதனால் அவரது ஒவ்வொரு செயலும் இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தியானது.

டிரைவர் காரை நிறுத்தி இறங்கி வந்து கதவைத் திறக்கும் முன் ,மேகன் தானே கதவை திறந்துகொண்டு இறங்கியதைக்கூட செய்தியாக்கினார்கள்.

இப்படி இரு வேறு துருவங்களாக இரண்டு மருமகள்களும் அமைந்து விட்டதால் இங்கிலாந்து ராஜகுடும்பத்தி தொடங்கிய சினச்சின்ன சச்சரவுகள் வளர்ந்து பெரிதாகி கும்பத்தில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது!

william

இனி,இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிட்டில்டனும் பாட்டியுடன் பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும்,தம்பி ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்க்கெலும் விண்ஸர் நகரில் இருக்கும் எலிசபெத் ராணிக்கு சொந்தமான ஃபிராக்மோர் காட்டேஜில் வசிப்பார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது.

வீடு தன்னித்தனியாக இருந்தாலும் அரசகுடும்பத்து ட்ரஸ்ட்டை இளவரசர்கள் இருவரும் சேர்ந்தே நிர்வகிப்பார்கள் என்றும் அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.

cottage

அரச குடும்பத்துல்கு சொந்தமான இந்த டிரஸ்ட் வீடற்ற ஏழைகள்,அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட முதியோருக்கு பல விதமான சேவைகளை வழங்குகிறது.

frogrance cottage

பிராக் மோர் எஸ்டேட்டின் பூர்வகதை.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் அப்போதைய அரசி விக்டோரியாவுக்கு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பல உதவியாளர்கள் இருந்தனர்.அவர்களில் முக்கியமானவர் அப்துல் கரீம். 

விக்டோரியாவுக்கு கரீமிடம் அலாதியான அன்பு. கரீமை அரசியே ‘முன்ஷி’ என்றுதான் அழைப்பார்.முன்ஷி என்கிற இந்தி சொல்லுக்கு ஆசியர் என்று பொருள்.

1887 ல் விக்டோரியாவின் ஐம்பதாவது பிறந்த நாளுக்கு மோஹர் என்கிற தங்க நாணயத்தை பரிசளிக்க ஆக்ராவில் இருந்து வந்த முன்ஷி கரீமுக்கு அப்போது வயது 24!

வெகு விரைவிலேயே ராணிக்கு மிகவும் நெருக்கமானவராகிவிட்ட முன்ஷிக்கு பல விலையுயர்ந்த பரிசுகளை வாரி வளங்கினார் விக்டோரியா.அப்படி வழங்கப்பட்ட பரிசுகளில் ஒன்றுதான் இந்த ஃபிராக்மோர் காட்டேஜ்.

ராணி அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்து கரீமோடும் அவரது மனைவியுடனும் தேனீர் அருந்துவாராம்.ராணிக்கும் கரீமுக்கும் இடையே இருந்தது வெறும் நட்பல்ல,அவர்கள் காதலர்கள் என்று இந்த வீட்டின் பின்னணியில் சினிமாவெல்லாம் வந்திருக்கிறது.