இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடை”!!

 

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனுக்கு ஐசிசி தடை”!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் குறித்த நேரத்திற்கும் தாமதமாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் குறித்த நேரத்திற்கும் தாமதமாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஐசிசி தடை விதித்து உத்தரவிட்டது.

morgan

உலகக்கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுடன் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை மேற்கொண்டு இருக்கிறது. அதில் முதலாவதாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 358 ரன்கள் அடித்து அசத்தியது. அதன் பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் இருவரும் சிறப்பாக ஆடி நல்ல துவக்கம் கொடுத்தனர். ஜேசன் ராய் அரை சதமும் பேர்ஸ்டோ சதமும் சதம் விளாசினர். அதேபோல பின்னர் வந்த மோர்கன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வெற்றிபெற செய்தார்.

icc

இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 50 ஓவர்களை வீச முடியாமல் 2 ஓவர்கள் தாமதமாக வீசியது. இதனால் அணியின் கேப்டன் மோர்கனுக்கு 40 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியது. 

ஒரே ஆண்டில் இரு முறை தாமதமாக பந்து வீசிய காரணத்திற்காக ஐசிசி விதிப்படி, இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் ஒரு ஒருநாள் போட்டியில் தடை செய்யப் பட்டுள்ளார். இதனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவர் ஆட மாட்டார் என தெரியவந்துள்ளது