இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு அர்பணித்த விராட் கோலி!

 

இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு அர்பணித்த விராட் கோலி!

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிராக 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள மக்களுக்கு அர்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியிடம் பெற்ற தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஆட்டநாயகனாக கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் 97 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 103 ரன்களும் என மொத்தம் 200 ரன்களைக் குவித்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து விராட் கோலி பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள் இந்த வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். இந்திய அணியாக எங்களால் செய்ய முடிந்த சிறிய விஷயம். கேரளாவில் தற்போது கடினமான நேரம்’’ என்றார். கோலி இவ்வாறு கூறியதும் மைதானத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.