இங்கிலாந்தின் புதிய நிதியமைச்சரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்…..

 

இங்கிலாந்தின் புதிய நிதியமைச்சரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்…..

இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அமைச்சரவை மாற்றி அமைப்பது வழக்கமான நடைமுறை என்றாலும், போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி அரசியல்வாதியை சேர்த்து இருப்பதுதான் பலரது உருவத்தையும் உயர்த்தியுள்ளது. இங்கிலாந்தின் புதிய நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை போரிஸ் ஜான்சன் புதிய நிதியமைச்சராக நியமனம் செய்துள்ளார்.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இங்கிலாந்தின் நிதியமைச்சராக இருந்த சாஜித் ஜாவித் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ததால் ரிஷி சுனக் புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான ரிஷி சுனக் 2015ம் ஆண்டு முதல் யார்க்ஷயர் ரிச்மோண்ட்  எம்.பி.யாக. இருந்து வருகிறார். இவர் மனைவி வேறுயாருமல்ல, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனகளில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா. ரிஷி சுனக்-அக்ஷதா தம்பதியினருக்கு கிருஷ்ணா மற்றும் அனோஷ்கா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளுடன் ரிஷி சுனக் தம்பதியினர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பிரித்தி படேல் மற்றும் அலோக் சர்மா ஆகிய 2 இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் இடம் பெற்றுள்ளனர். தற்போது 3வது இந்திய வம்சாவளி அரசியல்வாதியாக ரிஷி சுனக் இங்கிலாந்து அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.