இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா?

 இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா?

ஐரோப்பியன் யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ஒப்புதலை பெற முடியாததால்தான் ஜூன் 7-ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் தெரசா மே.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று நாள் விசிட்டாக இங்கிலாந்து வருகிறார். அதற்கு பிறகே புதிய பிரதமர் பதவியேற்பு இருக்கும்.

theresa may

இங்கிலாந்து சட்டப்படி மெஜாரிட்டி எம்.பி-க்களை வைத்திருக்கும் கட்சி எம்பி-க்கள் தங்களது தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர் தாமாகவே பிரதமர் ஆகிவிடுவார்.இப்போது ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் அடுத்த பிரதமர் யார் என்பது பரபரப்பான விவாதம் ஆகியிருக்கிறது. ஒவ்வொருவராக அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்.பிரதமர் தெரசா மேயின் மந்திரி சபையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரும் ,பிரக்சிட்டை எதிர்த்து ராஜினாமா செய்தவருமான போரிஸ் ஜான்சன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைக்கேல் கோவ்,இருவரும் வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.

இவர்களைத் தவிர முன்னாள் பிராக்சிட் செயலாளர் டோமினிக் ராப்,முன்னால் நாடாளுமன்ற தலைவர் ஆன்றியோ லீட்சம் ஆகியோரும் களத்தில் இருப்பதாக தெரிகிறது.இன்னும்,வெளியுறவு துறை இணைச் செயலாளர் ஜெர்மி ஹண்ட், பன்னாட்டு மேம்பாட்டுச் செயலர் ரோரி ஸ்டீவர்ட்,சுகாதார துறை செயலர் மாட்டின் ஹாக்,முன்னால் வேலை மற்றும் ஓய்வூதிய துறை செயலர் மிக்வே எஸ்தர், உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான ரேசில் இருக்கிறார்கள்.

இதில் கடந்த முறை தெரசா மேயுடன் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகி,தெரசா வெல்ல வழிவிட்டவர் முன்னாள் நாடாளுமன்ற தலைவர் ஆன்றியோ லீட்சம்தான் முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.