ஆ.ராசாவை தி.மு.க பொதுச்செயலாளர் ஆக்க ஸ்டாலின் திட்டமா? – தி.மு.க-வில் பரபரப்பு

ஆ.ராசாவை தி.மு.க பொதுச்செயலாளர் ஆக்க ஸ்டாலின் திட்டமா? – தி.மு.க-வில் பரபரப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் மாநிலத் தலைமைப் பதவிக்கு தாழ்த்தப்பட்டவர் வந்திருக்கிறார் என்பதை அக்கட்சியினர் பெருமையாக கூறி வருகின்றனர். இதற்கு முன்பு இந்த பதவிக்கு வந்த தாழ்த்தப்பட்டவர்கள் சந்தித்த அவமானங்கள் பற்றி எதிர் தரப்பினர் பதில் அளித்து வருகின்றனர்.

தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசாவை நியமிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. டெல்லியில் வலுவான தலைவராக ஆ.ராசா விளங்கும் நிலையில் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கட்சியினர் கூறுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் மாநிலத் தலைமைப் பதவிக்கு தாழ்த்தப்பட்டவர் வந்திருக்கிறார் என்பதை அக்கட்சியினர் பெருமையாக கூறி வருகின்றனர். இதற்கு முன்பு இந்த பதவிக்கு வந்த தாழ்த்தப்பட்டவர்கள் சந்தித்த அவமானங்கள் பற்றி எதிர் தரப்பினர் பதில் அளித்து வருகின்றனர்.

mk stalin

இந்த நிலையில் தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு யார் வருவார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. தற்போது பொருளாளராக உள்ள துரைமுருகன் தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. பொருளாளர் பதவிக்குத்தான் தற்போது தி.மு.க-வில் போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தி.மு.க-வுக்கு வெளியே இருந்து தற்போது ஆ.ராசாவை தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பா.ஜ.க-வுக்கு பதிலடியாக ஆ.ராசா நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
ஆ.ராசா பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளராக உள்ளார். அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வந்தபோது அதை அவரே ஏற்க மறுத்துவிட்டார். அதன் பிறகு அவர் டெல்லியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி ஏற்றது எல்லாம் அறிந்ததே. அவரது சாதியைக் காரணம் காட்டியே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வழக்குகளிலிருந்து விடுதலைப் பெற்ற அவர் டெல்லியில் தி.மு.க-வின் முகமாக இருந்து வருகிறார். அதனால், அவர் அதிக நாட்கள் டெல்லியில் இருக்க வேண்டியுள்ளது.

dmk

பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தால் தினமும் அறிவாலயம் வர வேண்டும்… தி.மு.க-வின் அன்றாட நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும். இதற்கு எல்லாம் ஆ.ராசாவுக்கு நேரம் இருக்காது. அதனால் ஆ.ராசா பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அப்படியே மு.க.ஸ்டாலினே விரும்பினாலும் ஆ.ராசா அந்த பதவியை ஏற்க மாட்டார்… டெல்லியில் இருப்பதையே ஆ.ராசா விரும்புகிறார் என்கின்றனர். 
தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. கிளை, உட்கழக தேர்தல் முடிந்து பொதுச் செயலாளர் தேர்தல் என்பது ஆகஸ்டு மாதம் நடைபெறும். அப்போதுதான் யார் தி.மு.க பொதுச் செயலாளர் என்பது உறுதியாகும் என்கின்றனர் தி.மு.க மூத்த நிர்வாகிகள்.