ஆஹா ஓடிவா ஓடிவா ஓடிவா, ருவாய்க்கி ஒரு சட்டை ஓடிவா ஓடிவா

 

ஆஹா ஓடிவா ஓடிவா ஓடிவா, ருவாய்க்கி ஒரு சட்டை ஓடிவா ஓடிவா

ஒரு பேச்சுக்கு, அந்த கடை திறப்பு விழாவுக்கு ஒரு சீரியல் நடிகையையோ அல்லது வி.ஆர்.எஸ். வாங்குகிற நேரத்தில் இருக்கும் ஃபீல்ட் அவுட் நடிகையையோ வைத்து கடையைத் திறந்திருந்தால் இவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா? இல்லை மீடியாதான் இதைப்பற்றி பேசியிருக்குமா? ஒரே ஒரு யோசனை, ஒரு ரூவா யோசனை, இப்ப பாத்தீங்கன்னா, அந்த கடைதான் அந்த ஏரியாவுக்கே லேண்ட் மார்க்.

காரைக்குடியில் புதிதாக ஒருவர் துணிக்கடை திறந்திருக்கிறார். அக்கினிக்கு முன் அக்கினிக்கு பின் அப்படீன்னு எந்த வித்தியாசமும் இல்லாமல் கொளுத்தும் இந்த கோடை வெயிலில் புது கடையை திறந்தால், யார்தான் கடைப்பக்கம் வருவார்கள்? முதல் நாள் அதுவும் கடை வெறிச்சோடி இருந்தால் நன்றாகவா இருக்கும்? வரும் சொந்தக்காரர்கள் ஃபார்மாலிட்டிக்காக ஒரு கர்சீஃப் மட்டும் வாங்குவார்கள். அபசகுனமா இருக்கும். லட்சக்கணக்குல செலவு பண்ணி விளம்பரம் செய்ய முடியாது. என்ன பண்ணலாம்னு யோசிச்ச ஓனருக்கு அம்பானி மூளை போல. ஒரு ரூவாய்க்கி ஒரு சட்டை, முதலில் வரும் ஆயிரம் நபர்களுக்கு என்று 4 * 4 சைஸ்ல ஒரு போர்ட் வைத்தார். என்ன நடந்திருக்கும்?

1 Shirt 1 Rupee

சன்னி லியோன் கேரளா வந்தபோது போக்குவரத்தையே நிறுத்துகிற அளவுக்கு கூட்டம் கூடினது மாதிரி, மொத்த காரைக்குடிக்காரங்களும் குமிஞ்சுட்டாங்க. காவல்துறை வந்து வரிசையை சீர்படுத்துகிற அளவுக்கு நிலைமை கைமீறி போச்சுன்னா பாத்துக்கங்க. ஒரு பேச்சுக்கு, அந்த கடை திறப்பு விழாவுக்கு ஒரு சீரியல் நடிகையையோ அல்லது வி.ஆர்.எஸ். வாங்குகிற நேரத்தில் இருக்கும் ஃபீல்ட் அவுட் நடிகையையோ வைத்து கடையைத் திறந்திருந்தால் இவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா? இல்லை மீடியாதான் இதைப்பற்றி பேசியிருக்குமா? ஒரே ஒரு யோசனை, ஒரு ரூவா யோசனை, இப்ப பாத்தீங்கன்னா, அந்த கடைதான் அந்த ஏரியாவுக்கே லேண்ட் மார்க். மச்சான் எங்கடா இருக்க? நான் அந்த ஒரு ரூவா கடைக்கி முன்னாடி நிக்கிறேன்டா!… எப்பூடி?