ஆஸ்பிட்டல் பில்லுக்காக இறந்த நோயாளியின் பைக்கை பறித்துக்கொண்ட மருத்துவமனை!

 

ஆஸ்பிட்டல் பில்லுக்காக இறந்த நோயாளியின் பைக்கை பறித்துக்கொண்ட மருத்துவமனை!

பொறுமையிழந்த ரேவதி மருத்துவமனை நிர்வாகம், நிலுவைத் தொகைக்காக நவீன்குமாரின் இருசக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது எனக்கூறி நவீன்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், போகும் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக இறந்திருக்கிறார்.

திருப்பூர் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான நவீன்குமார், கடந்த மாதம் விபத்தில் சிக்கி திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நவீன்குமாருக்காக மொத்தமாக ஐந்தரை லட்சம் பில் தொகை அவ்வப்போது கட்டியிருக்கின்றனர். சிகிச்சையை தொடர்வதற்கு மேலும் பணம் செலுத்த வேண்டுமென நவீன்குமார் உறவினர்களை மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியிருக்கிறது. 

Tirupur Revathi Hospital

விசைத்தறி கூலித்தொழிலாளியான நவீன்குமாரிடம் பெரிய சேமிப்பு ஏதுமில்லை, பெற்றோராலும் ஓரளவுக்குமேல் பணம் திரட்ட முடியவில்லை.  எனவே, பணம் திரட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் கூடுதல் நேரம் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் பொறுமையிழந்த ரேவதி மருத்துவமனை நிர்வாகம், நிலுவைத் தொகைக்காக நவீன்குமாரின் இருசக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது எனக்கூறி நவீன்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், போகும் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக இறந்திருக்கிறார். ஐந்தரை லட்சம் செலுத்தியும் போதாமல், இருசக்கர வாகனத்தையும் பிடுங்கிக்கொண்டு, ஆம்புலன்ஸ்மூலம் வெளியேற்றியதால் பாதிவழியில் இறந்த நவீன்குமாரின் உறவினர்கள், அவரின் உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.