ஆஸ்திரேலியா வெற்றி.. உயிர் பெற்ற ஒருநாள் தொடர்; கோலியின் சதம் வீணான சோகம்!

 

ஆஸ்திரேலியா வெற்றி.. உயிர் பெற்ற ஒருநாள் தொடர்; கோலியின் சதம் வீணான சோகம்!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது

-குமரன் குமணன்

நாக்பூர்: இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஓருநாள் போட்டியில் ,டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தீர்மானித்தது. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை .ஆஸ்திரேலிய அணியில் குல்டர் நைலுக்கு பதில் ரிச்சர்ட்ஸன் இடம்பெற்றார்.

ஆட்டத்தின் ஏழாவது ஒவரின் நான்கவது பந்தில் (ஐடேஜா பந்துவீச்சில் ) தவன் தவற விட்ட கேட்ச் ,இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த ஓரு தருணத்தால் தப்பிய உஸ்மான் கவாஜா ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை (104 (113 11×4 1×6 பதிவு செய்தார் .அவர் ஆட்டமிழந்த போது ஸ்கோர் 239/2(38.3) இதற்கு முன் 93 ரன்கள் (99ப 10×4 3×6) எடுத்திருந்த ஃபிஞ்ச், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட போதே ஸ்கோர் 31.5 ஓவர்களில் 193 ரன்களை எட்டியிருந்தது.

மிகப்பெரிய இலக்கு ஓன்றை துரத்த வேண்டிய சூழல் உருவாக அத்தனை சாத்தியங்களும் இருந்த போது மேக்ஸ்வெல் ,ஜடேஜா ,தோனி கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டு 47 ரன்களில் வெளியேறினார். அப்போதைய ஸ்கோர் 258/3 (42) இதற்கடுத்த ஒவரிலேயே மேலும் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார் குல்தீப் யாதவ்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஜந்து விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எட்டியது . கடைசி பத்து ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

துரத்தலின் போது, 6.2 ஓவர்களிலேயே 27 ரன்களில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா .தவன் ஒரு ரன்னில் ரிச்சட்ஸனாலும் ,ரோஹித் ஷர்மா மற்றும் ராயுடு முறையே 14 ரன்கள் மற்றும் ரன் ஏதுமின்றியும் பேட் கம்மின்ஸாலும் வீழ்த்தப்பட்டனர்.

ஸ்கோர் 89ஆக இருந்தபோது தோனி 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதனிடையே மற்றொரு புறம் அபாரமாக விளையாடிய கோலி, தனது சதத்தை பூர்த்தி செய்தார் .அது அவரது 41ஆம் ஒருநாள் போட்டி சதமாகவும் ,துரத்தல்களில் வந்த 25ஆம் சதமாகவும் பதிவானது .95 பந்துகளில் 16 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் கொண்ட 123 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் கை கோர்த்த கேதார் ஜாதவ் மற்றும் விஜய் ஷங்கர் முறையே 26(42 2×4 1×6) மற்றும் 32(30) 4×4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .இதனால் பெரும் நெருக்கடி உருவானது. எட்டாவது விக்கெட்டாக ஜடேஜா ,24 ரன்களுக்கு ஆட்டமிழந்த போது இந்தியாவின் தோல்வி உறுதியானது.

இறுதியில் இந்திய அணி 281 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஸாம்பா, கம்மின்ஸ் ,ரிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் லியோன் ஓரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

உஸ்மான் க்வாஜா ஆட்ட நாயகன் ஆனார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தாலும், தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படிருக்கிறது. அடுத்த ஆட்டம் ஞாயிறன்று மொகாலியில் நடக்க உள்ளது.