ஆஸ்திரேலியா காட்டுத் தீ… வரலாறு காணாத அழிவு… இதுவரை 90,000 விலங்குகள் உயிருடன் மீட்பு 

ஆஸ்திரேலியா காட்டுத் தீ… வரலாறு காணாத அழிவு… இதுவரை 90,000 விலங்குகள் உயிருடன் மீட்பு 

ஆஸ்திரேலியாவிலுள்ள  விலங்குகள் சரணாலயத்தின் பாதுகாவலாக  மறைந்த ஸ்டீவ் இர்வின், இவர் வாழ்நாள் முழுவதும் விலங்குங்களுக்காக  ஆற்றிய தொண்டுகள் ஏராளம். தவிர, அவர் உயிரியல் பூங்கா காப்பாளர், தொலைக்காட்சி பிரபலம்,வானவியல் நிபுணர்,சுற்றுசூழல் ஆர்வலர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு டாக்குமெண்டரி படம்பிடித்து கொண்டிருந்தபோது stringray எனப்படும் ஒரு கடலுயிரியால் கொல்லப்பட்டார்.

steve

தற்போது , ஸ்டீவின் குடும்பத்தினரும் அவர் விட்டுச் சென்ற  பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இந்த குடும்பம் குயின்ஸ்லாந்தில் உள்ள ஆஸ்திரேலியா மிருகக்காட்சிசாலையில் ஒரு விலங்குகள் மருத்துவமனையை நடத்தி வருகிறது.அங்குள்ள கால்நடை (veterinary) மருத்துவர்கள் இதுவரை பற்றி எரிந்து கொண்டிருக்கிற காட்டு தீயிலிருந்து 90,000 விலங்குளை கைப்பற்றியுள்ளனர்.

steve

 அதில் நரிகள்,வௌவால்கள் இன்னும் பல காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட உயிர்களும் அடங்கும். ஸ்டீவின் மகள் பிண்டி இர்வின் கண்டதில்,இதுவரை அதிகமான உயிர்கள் தீயில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மருத்துவர்கள்,எவ்வளவு  விலங்குகளை காப்பாற்ற முடியுமோ அவ்வளவு விலங்குகளையும் காப்பாற்றிவிட வேண்டும் என்று கடுமையாக உழைப்பதாக  தெரிவித்திருக்கிறார்.

irwin

மேலும் இதுகுறித்து பிண்டி இர்வின் தனது இன்ஸ்டாகிராம்  போஸ்டில் ,’இந்த ஆஸ்திரேலியா காட்டுத்தீயால்  ஏற்பட்ட அழிவுகளைப்  பார்க்கும்போது என் இருதயம் நொறுங்குகிறது,இதில் ஏரளமான மக்களும் அதிகளவு விலங்குகளும் உயிரிழந்துள்ளனர்.எங்கள் வனவிலங்கு மருத்துவமனை அருகில் மட்டும்  இதுவரை 90,000 உயிர்களை காப்பாற்றியுள்ளோம்.

bindi

என்னுடைய பெற்றோர் இந்த மருத்துவமனையை எங்கள் பாட்டியின் நினைவாக வழங்கினர்.நாங்கள் தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக தொடர்ந்து எங்களால் முடிந்தவரை விலங்குகளை காக்கும் போர்வீரர்களாக செயல்படுவோம்’ என்று உருக்கமாக பதிவு செய்திருக்கும் அவர், ‘ப்லோஸ்ஸோம் தி போசம்’ எனும் இந்த விலங்குகள் மருத்துவமணையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த பல உயிரினங்கள் எவ்வளவு தீவிர சிகிச்சைகள் கொடுத்ததும் காப்பாற்ற முடியாமல் போனது பெரும் துயரமானது’ என்று உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அங்கிருந்து வந்த தகவலின் படி, ஆஸ்திரேலியாவின் ‘நியூ சவுத் வேல்ஸ் பகுதியில்’ காட்டுத்தீயில் மூன்று பங்கு கோலா கரடி இனம் அழிந்திருக்கலாம் என்றும், காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்த அதிகாரிகளின் கணக்குப்படி தீயை முழுவதுமாக அணைக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் வெகு நாட்கள் ஆகும் என்கிறது.