ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வேன்: ஜோப்ரா ஆர்ச்சர் சூளுரை

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வேன்: ஜோப்ரா ஆர்ச்சர் சூளுரை

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்வேன் என இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வேன்: ஜோப்ரா ஆர்ச்சர் சூளுரை

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் தொடராக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்வேன் என இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டி அளித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் தொடராக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

2001ம் ஆண்டுக்குப் பிறகு அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. இதனை முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து மாற்றி அமைத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஒரு வருட தடைக்குப் பிறகு அவர் பங்கேற்ற முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இதில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முழு உடல்தகுதி பெறாததால் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியில் அமர்த்தப்பட்டார். 

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் திடீர் காயம் காரணமாக அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளியேறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் காயம் காரணமாக வெளியிலேயே அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் ஆடுகிறார். இது இவருக்கு சர்வதேச கிரிக்கெட் உலகில் முதல் டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்திற்காக அறிமுகப் போட்டியில் அசத்துவேன் என்றும், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்வேன் என்றும் ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ” நான் இதுவரை டெஸ்ட் போட்டியே ஆடியதில்லை. டி20 போட்டி க்கு மட்டுமே நான் சரியாக இருப்பேன் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அது முற்றிலும் தவறு. நான் டி20 போட்டியை விட டெஸ்ட் போட்டியில் தான் அதிகம் ஆடி இருக்கிறேன். இங்கிலாந்து கவுண்டி அணியில் சில ஆண்டுகளாக ஆடி வருகிறேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லாததால் ரசிகர்களுக்கு தெரியவில்லை. நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அசத்துவேன். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.