ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வதில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா !!

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வதில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ரோஹித் சர்மா புதிய சரித்திர சாதனை ஒன்றை படைத்துள்ளார். 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகின்றன.

ind vs aus

லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் துவக்கம் கொடுத்தனர். 
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட ஷிகர் தவான் – ரோஹித் சர்மா கூட்டணி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அமைத்து கொடுத்தது. 

rohit sharma

இதில் 57 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தோனி, கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். 
ஒரு அணிக்கு எதிராக மிக குறைந்த இன்னிங்ஸில் 2000+ ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியல்;
ரோஹித் சர்மா vs ஆஸ்திரேலியா – 37 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா – 40 இன்னிங்ஸ்
வி.வி ரிச்சர்ட்ஸ் vs ஆஸ்திரேலியா – 44 இன்னிங்ஸ்
விராட் கோஹ்லி vs இலங்கை – 44 இன்னிங்ஸ்
தோனி vs இலங்கை – 45 இன்னிங்ஸ்.