ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா? இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை!

ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா? இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை!

இந்தியா-ஆஸ்திரேலியா இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை மேற்கொள்கின்றன.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை துவம்சம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

dhoni

இந்நிலையில், இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (17-ந்தேதி) நடக்க இருக்கிறது. 

முதல் ஆட்டத்தில் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், 2வது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 2வது போட்டியிலும் இந்தியா தோல்வியுறும் பட்சத்தில் தொடரை இழக்க நேரிடும். இதனால் வீரர்கள் ராஜ்கோட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2வது போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்யும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

india

முதல் போட்டியில் கேப்டன் விராட்கோலி 4வது இடத்தில களம் கண்டார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளது. இது ஒருபோட்டியில் மட்டுமே என பேட்டியளித்தார். ஆதலால், 2வது போட்டியில் அவர் வழக்கம் போல 3வது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது.

அதேபோல், முதல் போட்டியில் காயம் காரணமாக கீப்பிங் செய்யாமல் இருந்த ரிஷாப் பந்த் 2வது போட்டியில் இருக்கமாட்டார் என தெரிகிறது. இப்போட்டியில் ராகுல் கீப்பிங் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பேட்டிங்கிலும் 4வது இடத்தில் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

முதல் போட்டியில் செய்த தவறுகளை இந்திய வீரர்கள் திட்டமிட்டு சரி செய்து ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டால் இந்திய அணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் வெற்றி நிச்சயம்!.