ஆஸ்திரேலியாவுக்கு கடத்த  இருந்த ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த  இருந்த ரூ.2.4 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட அபினின் சந்தை மதிப்பு ரூ .2.33 கோடி, சூடோபீட்ரின் ரூ .7 லட்சம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. போதை மருந்துகள் மற்றும் மனநல பாதிப்பு  பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரு கூரியர் கிடங்கில் இருந்து 11.68 கிலோகிராம் அபின் மற்றும் 4.8 கிலோ சூடோபீட்ரைன் என்ற போதைப் பொருளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அபினின் சந்தை மதிப்பு ரூ .2.33 கோடி, சூடோபீட்ரின் ரூ .7 லட்சம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. போதை மருந்துகள் மற்றும் மனநல பாதிப்பு  பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

abin

சென்னை கஸ்டம்ஸ் துறையின் அதிகாரபூர்வ தகவலின் படி “ரூ .2.33 கோடி மதிப்புள்ள 11.68 கிலோ ஓபியம் 4.8 கிலோ சூடோபீட்ரைன் மற்றும் ரூ .7 லட்சம் மதிப்புள்ள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட  இருந்த  2 கூரியர் பார்சல்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் ஒரு கூரியர் கிடங்கில் இருந்து அந்த  போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின்  மொத்த மதிப்பு ரூ .2.4 கோடி ஆகும். இந்த  கடத்தல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்  என்றும் தெரிவித்திருந்தனர்.