ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணி தோல்வி

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணி தோல்வி

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஆஸ்திரேலிய XI நேற்றே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்தியா ,6 பேட்ஸ்மேன்கள் (ரோஹித் ,தவன் ,கோலி ,ராயுடு , தோனி கார்த்திக் ) ஒரு ஆல் ரவுண்டர் (ஜடேஜா ) 4 பந்துவீச்சாளர்கள் (புவனேஸ்வர் குமார் ,ஷமி ,குல்தீப் ,கலீல் அஹமத்) என்கிற அமைப்புடன் களம் கண்டது.

– குமரன் குமணன்

சிட்னி: சிட்னியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஆஸ்திரேலிய XI நேற்றே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்தியா ,6 பேட்ஸ்மேன்கள் (ரோஹித் ,தவன் ,கோலி ,ராயுடு , தோனி கார்த்திக் ) ஒரு ஆல் ரவுண்டர் (ஜடேஜா ) 4 பந்துவீச்சாளர்கள் (புவனேஸ்வர் குமார் ,ஷமி ,குல்தீப் ,கலீல் அஹமத்) என்கிற அமைப்புடன் களம் கண்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி சர்ச்சையால் ஹர்திக் பண்ட்யா மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும் காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் இருவரும் இத்தொடரின் மற்ற போட்டிகளிலும் அடுத்ததாக நியூசிலாந்து செல்லும் குழுவிலும் இடம் பெற முடியாது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாமுதல் விக்கெட் நீங்கலாக மற்ற விக்கெட்டுகளுக்கு சீரான கூட்டனிகளில் ரன்கள். வந்துகொண்டே இருந்ததால் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. ஃபிஞ்ச் 6 ரன்களில் புவனேஸ்வர் பந்துவீச்சில் வெளியேறினார்.11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார் அவர் .அப்போதைய ஸ்கோர் 8-1 (2.2 ஓவர்களில்)

மற்றோரு தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் கேரியை ,தான் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார் .5 பவுண்டரிகளோடு 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த கேரி , ரோஹித் ஷர்மாவுக்கு ஸ்லிப் கேட்ச் கொடுத்தார் .அந்த ஒவர் ஆட்டத்தின் பத்தாவது ஓவர் .அதன் முடிவில் ஸ்கோர் 41/2.

aussie

மூன்றாவது விக்கெட்டுக்கு உஸ்மான் க்வாஜா -ஷான் மார்ஷ் இணை 92 ரன்கள் சேர்த்தது .81 பந்துகள் சந்தித்த க்வாஜா 59 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஸ்வீப் செய்யும் முயற்சியில் LBW ஆனார் .அப்போதைய ஸ்கோர் 133/3(28.2 ஓவர்களில்) இதன் பிறகு மீண்டும் ஒரு 53 ரன்கள் கூட்டனியை ஷான் மார்ஷுடன் இணைந்து அமைத்தார் பீட்டர் ஹாட்ஸ்கோம்ப்.

186 ரன்களாக ஸ்கோர் இருந்தபோது 37ஆம் ஒவரின் 3ஆம் பந்தில் ஷான் மார்ஷ் குல்தீப் பந்துவீச்சில் வீழ்ந்தார் .லாங் ஆன் திசையிலிருந்து முன்னோக்கி வந்து கீழே விழுந்து எழுந்து கேட்சை பூர்த்தி செய்தார் முகமது ஷமி. 4 பவுண்டரிகளோடு 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் மார்ஷ்.

ஒரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த ஹேன்ட்ஸ்கோம்ப ,அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸுடன் இணைந்த பிறகு அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார் .இந்த இணை 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேன்ட்ஸ்கோம்ப் 73 ரன்களில் வீழ்ந்தபோது அணியின் ஸ்கோர் 47.2 254 ரன்களுக்கு 5 விக்கெட். 61 பந்துகளை எதிர்கொண்ட ஹேன்ட்ஸ்கோம்ப் ஆறு பவுன்டரிகளும் 2 சிக்சர்களும் அடித்திருந்தார்.

இறுதிக்கட்டத்தில் உண்மையில் தாமதமாக களமிறக்கப்பட்ட மேக்ஸ்வெல் ஒரு பவுன்டரியுடன் ஜந்தே பந்துகளில் 11 ரன்கள எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .மறு முறையில் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகள் இரு சிக்ஸர்களுடன் 43 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். புவனேஸ்வர் பந்துவீச்சில் தவனிடம் கேட்ச் ஆனார் அவர்.

india

இதனையடுத்து 289 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அறிமுக பந்துவீச்சாளர் பெஹ்ரென்டாஃப் மற்றும் அனுபவமற்ற ஜய் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் அதிர்ச்சி அளித்தனர் .தவன் தான் சந்தித்த முதல் பந்திலேயே பெஹ்ரென்டாஃப் பந்துவீச்சில் LBW ஆகி வெளியேற கோலி ,ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டாய்னிஸிடம் கேட்ச் கொடுத்து 8 பந்துகளில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .ராயுடுவை ரிச்சட்ஸன் ரன் ஏதுமின்றி LBW செய்து ஆட்டமிழக்கச் செய்தார்.இவை அத்தனையும் இன்னிங்ஸின் முதல் 23 பந்துகளில் இந்தியா 4 ரன்கள் எடுப்பதற்குள் நடத்திவிட்டவை .இதன் பின்னர் தோனியும் -ரோஹித் ஷர்மாவும் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர் .ரன் விகதம் ஏறியபோதும் இவர்கள் இருவரும் இருந்ததால் துரத்தலில் அப்போது சிக்கல் ஏற்படவில்லை.

ஆனால் ஸ்கோர் 141 ரன்களாக இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக தவறான LBW தீர்ப்பால் தோனி வெளியேற நேரிட்டது. 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தபோது பெஹ்ரென்டாபஃப்புக்கு இந்த விக்கெட் போனது .பின்னர் ரோஹித் ஷர்மா சதத்தை பூர்த்தி செய்து 133 ரன்கள் வரை எடுத்திருந்தாலும் அவருக்கு துணை நிற்க எவராலும் இயலாததால் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் ,தோல்வி அடைந்தது .இறுதிக்கட்டத்தில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி பந்தில் ஷமி ஆட்டமிழக்க ,இந்திய இன்னிங்ஸ் 254 ரன்களில் முடிந்தது. ஜய் ரிச்சட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் 2 விக்கெட்டுகளும் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளும் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளும் சிடில் ஒரு விக்கெட்டும் கைபற்றினர்.

ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கும் இத்தொடரின் அடுத்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை 15ஆம் தேதி காலை 8.50 மணி முதல் அடிலெய்ட் நகரில் நடைபெறும்.