ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி  இன்று காலை 7.50 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்யை தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

INDVSAUS

ஆஸ்திரேலிய இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் நகரில் 7.50 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது .

இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

INDVSAUS

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்றைய டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்டை கைப்பற்றும் உத்வேகத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும், முதல் டெஸ்ட்டை வென்ற உற்சாகத்தில் இந்திய வீரர்களும் களமிறங்குகின்றனர்.

INDVSAUS

இன்றைய போட்டியின் ஆஸ்திரேலியா அணி விக்கட் இழக்காமல் 98 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டகாரர்களான ஹாரிஸ் 53 ரன்களுடனும் மற்றும் பின்ச் 38 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர்.இன்று துவங்கி நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய டெஸ்ட் போட்டியில் பங்குபெறும் இரு அணியின் வீரர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

இந்தியா:

1. லோகேஷ் ராகுல், 2. முரளி விஜய், 3. சத்தீஸ்வர் புஜாரா, 4. விராட் கோலி, 5. அஜின்க்யா ரஹானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. இஷாந்த் சர்மா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. ஜேஸ்பிரிட் பும்ரா

ஆஸ்திரேலியா:

1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஆரோன் பிஞ்ச், 3. உஸ்மான் கவாஜா, 4. ஷான் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 7. டிம் பெய்ன், 8. ஹசில்வுட், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. மிட்செல் ஸ்டார்க்.