ஆஸி.யில் அசத்தும் புஜாரா: புதிய ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ முடிவு

 

ஆஸி.யில் அசத்தும் புஜாரா: புதிய ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ முடிவு

கிரிக்கெட் வீரர் புஜாராவுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

டெல்லி: கிரிக்கெட் வீரர் புஜாராவுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

indian team

இந்த தொடரில், புஜாரா இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 74.42 சராசரியுடன் 521 ரன்களை குவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை புஜாரா இழந்தாலும், அவரது அபார ஆட்டத்தால் இந்த தொடரில் 3 சதங்களை விளாசி உள்ளார். 

இந்நிலையில், புஜாராவை கவுரவிக்க முடிவு செய்துள்ள பிசிசிஐ, அவருக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ’ஏ ’ கிரேடில் இருக்கும் புஜாராவை ’ஏ பிளஸ்’ பிரிவிற்கு மாற்றப்பட்டு அவரது ஊதியம் உயர்த்தப்படவுள்ளது.

pujara

டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வரும் புஜாரா, கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ஆண்டிற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் ’ஏ ’ கிரேடில் இருக்கிறார். ’ஏ பிளஸ்’ பிரிவில் கேப்டன் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்ஸ்வர் குமார் மற்றும் பும்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் புஜாரா விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

indian team

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏ, ஏ பிளஸ், பி, சி என 4 கிரேடுகளாக பிரிக்கப்படுகிறார்கள். அதாவது ’ஏ’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு தலா ரூ.5 கோடியும், ’ஏ பிளஸ்’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு தலா ரூ.7 கோடியும், ’பி’ பிரிவில் ரூ.3 கோடியும், ’சி’ பிரிவில் ரூ.1 கோடியும் ஊதியமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.