ஆஸி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

 

ஆஸி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்திய ஆஸ்திரேலிய அணிகளிடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் ஜந்தாம் போட்டி, தொடரின் முடிவை தீர்மானிக்க கூடியதாக மாறியுள்ளது. இந்த போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

குமரன் குமணன் –

புதுதில்லி: இந்திய ஆஸ்திரேலிய அணிகளிடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் ஜந்தாம் போட்டி, தொடரின் முடிவை தீர்மானிக்க கூடியதாக மாறியுள்ளது .இந்த போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

ஏற்கனவே இருபது ஓவர் தொடரின் ஆட்டங்கள் இரண்டிலுமே வென்று அந்த தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரையும் வசப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

australia

கடந்த பேட்டியில் அந்த அணி வெற்றி பெற்ற விதம், இந்திய மண்ணில் இந்திய அணிக்கெதிராக விளையாடிய எந்த எதிரணியும் செய்யாத சாதனை துரத்தலாக அமைந்தது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலும் அதிகபட்ச வெற்றிகரமான துரத்தலாக பதிவானது அந்த 359/6 

2012, 2013 காலகட்டத்தில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கெதிராக அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோற்றது இந்திய அணி. அதன்பின் அவ்வாறு நிகழ்வது இதுவே முதல்முறை.

பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. அந்த அணியின் வரலாற்றில் இதுவரை 2-0 என்று பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து தொடரை வென்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு மே மாதம் முதல் ஒருநாள் போட்டிகளில் லீக் முறை வரவிருக்கும் நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் கடைசி 5 போட்டிகள் கொண்ட தொடராக அமைந்துவிட்டது. லீக் முறையின் கீழ் வரும் தொடர்களில் போட்டிகளின் எண்ணிக்கை 3 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

rishabh pant

கடந்த போட்டியில் சில வாய்ப்புகளை தவற விட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் மீதே அதிக கவனம் குவிந்துள்ளது. தோனியின் ஒட்டுமொத்த பங்களிப்பும் (அணியை வழிநடத்தும் விதம் உட்பட ) இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது .

பந்த் உலக போப்பை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும், முக்கிய தருணங்களில் அனுபவமற்ற நிலையில் பதற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டு உள்ளார். நாளைய ஆட்டத்தில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

bumrah

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை வலுவான நிலையை எட்டியுள்ளதால் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு குறைவு. ஒருவேளை மாற்றம் நிகழ்ந்தால் லியோன் அல்லது பெஹ்ரெண்டாஃப் அணியில் இடம்பெற்று, ரிச்சர்ட்ஸன் விலக்கப்படலாம் .

கடந்த 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்தபோதும் இதே போல 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமநிலையை எட்டியது. அந்த தொடரை வெல்ல தவறிய இந்திய அணி, அதே போல் ஓரு சூழலில் இருந்து இப்போது மீண்டு வருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.