ஆஸி..,ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

 

ஆஸி..,ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரரை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் அந்நாட்டு மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், செர்பிய வீரர் ஜோகோவிச்சும் மோதினர். டென்னிஸ் ரசிகர்கள் இடையே இப்போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் முதல் செட்டில் பெடரர் 4-1 என முன்னிலையில் இருந்தார். ஆனால் எழுச்சி பெற்ற ஜோகோவிச் அருமையாக விளையாடி 7-6 என முதல் செட்டை தன் வசப்படுத்தினார்.

இதையடுத்து நடந்த இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-4 என அதையும் கைப்பற்றினார். மேலும் மூன்றாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3 என வென்றார். இதன் மூலம் ரோஜர் பெடரரை எளிதில் காலி செய்தார் ஜோகோவிச். எனவே ரோஜர் பெடரரின் இறுதிப் போட்டி கனவு தகர்ந்தது. இப்போட்டியில் வென்றதன் மூலம் 8-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.