ஆஷஸ் தொடர்: மான்செஸ்டரில் இன்று 4வது டெஸ்ட் போட்டி!!

ஆஷஸ் தொடர்: மான்செஸ்டரில் இன்று 4வது டெஸ்ட் போட்டி!!

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராபார்டு மைதானத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடராக நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. 

eng vs australia

முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் இறுதிவரை போராடி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரோபோட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மதியம் 3 மணி அளவில் துவங்குகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மன அதிர்ச்சி காரணமாக வெளியில் அமர்த்தப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். 

smith

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பலத்தோடு களம் இறங்குவதால் இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

இன்றைய போட்டியில் ஆடும் உத்தேச ஆஸ்திரேலிய வீரர்கள்

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லேப்சேஞ்ச், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசல்வுட். 

இங்கிலாந்து வீரர்கள் பட்டியல்

ஜோ டென்லி, ரோரி பர்ன்ஸ், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், கிரேக் ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.