ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி!!

ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டோக்ஸ் விடாமுயற்சியால்.. இங்கிலாந்து வெற்றி!!

ஸ்டோக்ஸ் அபார சதத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் சாம்பியன் முதல் தொடராக ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 61 ரன்களும், லபு 64 ரன்களும் எடுத்தனர். 

ஸ்டோக்ஸ் அபார சதத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ben stokes

டெஸ்ட் சாம்பியன் முதல் தொடராக ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 61 ரன்களும், லபு 64 ரன்களும் எடுத்தனர். 

தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹேசல்வுட் 5 விக்கெடுகளை எடுத்தார். 

112 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, மீண்டும் லபு 80 ரன்கள் அடிக்க 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக, 358 ரன்கள் முன்னிலை பெற்றது.

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடர்ந்தது. துவக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரூட் மற்றும் டெண்லி நிதானமாக ஆடி சரிவில் இருந்து மீட்டனர். டெண்லி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர், ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். ரூட் 77 ரன்களுக்கு லியோன் சூழலில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மீண்டும் இங்கிலாந்து தடுமாற்றம் கண்டது. 

286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்த பிறகு, இந்த போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி தான் என அனைவரும் எண்ணினர். ஆவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஸ்டோக்ஸ் தான். இறுதிவரை தனி போராளியாக களத்தில் நின்று போராடினார்.

ben stokes

ஸ்டோக்ஸ் க்கு மறுமுனையில் ஜாக் லீச் விக்கெட் இழக்க விடாமல் சப்போர்ட் செய்து வந்தார். சதம் அடித்த ஸ்டோக்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தை ஆடினார். பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர்.

இறுதியில், 1 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தை வெற்றிபெற செய்தார். இதன் மூலம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 1-1 என சமன் செய்தது.

135 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த நம்பிக்கை நாயகன் ஸ்டோக்ஸ், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.