ஆஷஸ்: ஆர்ச்சர் அபாரம்.. தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!!

 

ஆஷஸ்: ஆர்ச்சர் அபாரம்.. தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை வென்று ஆஷஸ் தொடரை 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து அணி.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியை வென்று ஆஷஸ் தொடரை 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து அணி.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருந்தது. 

aus vs eng

இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் மற்றும் பட்லர் இருவரும் அரைசதம் கண்டனர். ஆஸ்திரேலிய அணிக்கு மிச்சல் மார்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. வழக்கம்போல, ஸ்மித் (80) மட்டுமே அணிக்கு கைகொடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களே எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

smith

69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இம்முறை துவக்க வீரர் டென்லி மற்றும் ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இருவரும் அணிக்காக ரன் சேர்த்தனர். டென்லி 94 ரன்களும் ஸ்டோக்ஸ் 57 ரன்களும் எடுத்து அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர். 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்களை இலக்காக வைத்தது. 

சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இம்முறை ஸ்மித் கைகொடுக்கவில்லை. ஆனால் அனுபவ வீரர் வேட் சதம் அடித்து அசத்தினார். அவர் ஒருவர் மட்டுமே அணையில் அரைசதம் கடந்த வீரராக இருந்தார். இறுதியில் 263 ரன்கள் மட்டுமே எடுத்து 135 ரன்கள் வித்தியாசத்தில் 5-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்தது. 

இங்கிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரை 2 – 2 என சமன் செய்தது. 

ஆட்ட நாயகனாக ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருது ஸ்மித் மற்றும் ஸ்டோக்ஸ் இருவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.