ஆவேசம் தீரும்வரை பொருட்களை துவம்சம் செய்யலாம்! போங்க போய் உடைச்சிட்டு  வாங்க!!

ஆவேசம் தீரும்வரை பொருட்களை துவம்சம் செய்யலாம்! போங்க போய் உடைச்சிட்டு  வாங்க!!

கோபம் ஏற்பட்டதால் நம்மில் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் உடைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி கோபத்தில் இருப்பவர்களை சாந்தப்படுத்த சீனாவில் கடை ஒன்றை திறந்துள்ளார் இளைஞர் ஒருவர். 

anger

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த அறைக்கு ANGER ROOM என பெயரிடப்பட்டுள்ளது.‌ இந்த அறையினுள் வீட்டில் உள்ள டிவி, கடிகாரம், தொலைபேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. கடுங்கோபத்தில் கடைக்குள் வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை கொடுத்துவிட்டு தங்கள் ஆவேசங்களை அந்த பொருட்களின் மீது வெளிப்படுத்தலாம். அவர்கள் அந்த பொருட்களை உடைக்கும்போது பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்கப்படும். 30 நிமிடங்களுக்கு பொருட்களை உடைக்க இந்திய மதிப்பில் ஐந்து ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

anger

பாதுகாப்புக் கவசங்கள் அணிந்தவாறு மட்டை, சுத்தியல் ஆகியற்றைப் பயன்படுத்தி பொருள்களை உடைக்கலாம். இதற்காக இந்த கடைக்குள் செல்லும்போது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக உடைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த உடையை அணிந்துகொண்டு பணத்தை கொடுத்து கோபம் தீரும்வரை பொருட்களை துவம்சம் செய்ய சீன மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணமான பெண்களும் ஆண்களும் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு தங்களது திருமண புகைப்படங்களை கொண்டுவந்து அந்த பொருட்களை அடித்துநொறுக்கி தங்களது ஆவேசத்துக்கு வடிகால் தேடிக் கொள்கின்றனர். 20 முதல் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த கடைக்கு அதிகமாக படையெடுப்பதாக கூறப்படுகிறது. 

image 2

வன்முறையை ஊக்குவிப்பது நோக்கமல்ல என்றும், வாடிக்கையாளர்களின் மன அழுத்தத்தை போக்கவே இந்த கடையை திறந்து வைத்திருப்‌தாக தெரிவிக்கிறார் உரிமையாளர் ஹான்ஜிங்.