ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா, ருத்திராட்சம் போட்டிருந்தாரா, அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்ற பல்வேறு கருத்துக்கள் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் நிலவி வந்தன.

திருவள்ளுவர் காவி உடை அணிந்தாரா, ருத்திராட்சம் போட்டிருந்தாரா, அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்ற பல்வேறு கருத்துக்கள் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் நிலவி வந்தன. பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை உடுத்தி, ருத்திராட்சம் அணிவித்து கற்பூர தீப ஆராதனை காட்டினர். இதற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, வள்ளுவர் சிலை மீது சாணி பூசி அவமதிப்பு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டதில் இருந்து இத்தகைய கருத்துக்கள் எழுவது குறிப்பிடத்தக்கது.  

Valluvar

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நிர்மல் குமார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு  வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும்.அவர்களின் மேலான பார்வைக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையைப் பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடிதத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘மிக விரைவில் தமிழக முதல்வர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு  வினியோகிக்கப்படும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.