ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

 

ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவைகளின் மூலமாக பால் பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மக்கள் வெளியே செல்ல முடியாத இந்த சூழலில், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எப்படி விநியோகம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. அதனால் பால் பாக்கெட்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்ய ஏற்பாடு செய்து வருவதாகவும்,  ஸ்மோடோ, டன்சோ, ஸ்விக்கி உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சேவைகளின் மூலமாக பால் பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ttn

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் இந்த நிலையில், மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றும் 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 500க்கும் மேற்பட்ட பணியாற்றி வரும் இந்த நிறுவனத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் பேக்கிங் செக்சனில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதால், மற்ற ஊழியர்கள் வேலைக்கு வர மறுப்பு தெரிவிக்கிறார்களாம். இதனால் பால் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.