ஆவினை தொடர்ந்து உயர்ந்தது ஆரோக்கியா பால் விலை!

 

ஆவினை தொடர்ந்து  உயர்ந்தது ஆரோக்கியா பால் விலை!

ஒரே ஆண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துகிறார்கள். இதனால் பால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும்

தமிழ்நாட்டில் ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில்  தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தியுள்ளது. 

aavin

ஆவின் பசும்பால்  ஒரு லிட்டர் 28 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் 35 ரூபாயும் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் பசும்பால் 32 ரூபாயும்,  எருமைப்பால்  41 ரூபாயும்  விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் பசும்பால் 4 ரூபாயும், எருமைப்பால் 6 ரூபாயும் விலை உயர்ந்தது.

 

arokiya

இந்நிலையில் ஆரோக்கியா பால் லிட்டர் ரூ.56-க்கு ஏற்கனவே விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் விலையில் 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. அப்படி இனி ஆரோக்கியா பால் லிட்டருக்கு 60 ரூபாய் விற்கப்படும்.இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கூறும் போது, ‘ஆவின் உள்பட அனைத்து பால்பாக்கெட் விலையும் ரூ.56-க்கு விற்கும் நிலையில் ஆரோக்கியா பால்பாக்கெட் 60 ரூபாய்க்கு விலையை ஏற்றிவிட்டனர். கடந்த மாதம்  தான் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துகிறார்கள். இதனால் பால் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும். ஆவின் பால் விலையைக் கூட்டியதால், தினமும் 90 ஆயிரம் லிட்டர் வரை பால் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால்  தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் தனியார் பால் விலையை உடனே முறைப்படுத்த வேண்டும்’ என்றார்.