ஆவணி மாதத்தில் இத்தனை திருவிழாக்களா… கொண்டாடுங்க மக்களே…!

ஆவணி மாதத்தில் இத்தனை திருவிழாக்களா… கொண்டாடுங்க மக்களே…!

தமிழ் மாதங்களில் ஆவணி மாதம்  சிங்கமாதம் எனவும், மாதங்களின் அரசன் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் முழு முதற்கடவுளான ஆனைமுகன் அவதாரமும் ,குழந்தைப் பருவ கடவுளான கிருஷ்ணன் அவதாரமும் நிகழ்ந்த அற்புதமான மாதம் இது.

நாம் தை மாதத்தைக் கொண்டாடுவதைப் போல கேரளாவில் ஆவணி மாதத்தைத் தான் வருஷத்தின் முதல் மாதமாகக் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் அறுவடை மாதமாக ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்ரவர்த்தி தாம் ஆட்சி செய்த கேரளாவை இந்த ஆவணி மாத ஓணத்தில் தான், மக்களின் சந்தோஷத்தைப் பார்க்க வருவதாக ஐதீகம். குலச்சிறை நாயனார், இளையான் குடிமாற நாயனார்,  திருநீலகண்ட  நாயனார், அதிபத்தநாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்களும் இந்த ஆவணி மாதத்தில் தான் வருகிறது.

1விநாயகர் சதுர்த்தி
2மகா சங்கடஹரசதுர்த்தி
3கிருஷ்ண ஜெயந்தி
4ஆவணி மூலம்
5ஆவணி அவிட்டம்
6வரலட்சுமி விரதம்
7புத்ரதா ஏகாதசி
8காமிகா ஏகாதசி
9ஓணம்
என்று நம் ஆன்ம பலத்தை அதிகரிக்க செய்கிற வகையான விழாக்கள் ஆவணி மாதத்திலே தான் வருகின்றன. இத்தனை சிறப்பு மிக்க ஆவணி மாதத்தில் இறைசிந்தனைகளை வளர்த்து மேன்மை அடைவோம்!