ஆவணம் இருந்தாலும் மாமூல் கொடு ! கடமை தவறா ஆய்வாளர் !

ஆவணம் இருந்தாலும் மாமூல் கொடு ! கடமை தவறா ஆய்வாளர் !

கோவை மாவட்டத்தில் சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தாலும் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தாலும் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள குற்றாலம், வெள்ளியங்கிரிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

kovai maran

அங்க வரும் வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்கள் சரியாக வைத்து இருந்தாலும், காருண்யா நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாறன் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்த ஏழு இளைஞர்களிடம் உதவி ஆய்வாளர் மாறன் பணம் கேட்பது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர்கள் அனைத்து ஆவணங்கள் சரியாக வைத்திருப்பதாக கூறினாலும், தலா 100 ரூபாய் கொடுக்குமாறு அந்த காட்சியில் பதிவாகி உள்ளது.

சுற்றுலா வரும் உங்களைப் போல் நாங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா என உதவி ஆய்வாளர் மாறன் கேட்பதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வரும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.