ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது தமிழக அரசு!

 

ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது  தமிழக அரசு!

ஆவடியை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

சென்னை:  ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஆவடியை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். மாநகராட்சியாகத்  தரம் உயர்த்துவதன் மூலம் அரசின் சலுகைகளை கொண்டு அப்பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளைச் செய்யலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

avadi

இந்நிலையில் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆவடி மாநகராட்சிக்குள் பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும். நெமிலிச்சேரி, நசரத்பேட்டை உள்பட 11 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளடங்கும். 

ஏற்கனவே  தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகள் உள்ள நிலையில் ஆவடியோடு சேர்த்து மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

avadi

முன்னதாக பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளையும்  மாநகராட்சியாக மாற்ற  உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.