ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை..? கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..!

 

ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை..? கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..!

ஆள் இல்லாத கடையில் டீ விற்கும் நிலைமையாகி விட்டது நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் நிலைமை.

ஆள் இல்லாத கடையில் டீ விற்கும்  நிலைமையாகி விட்டது நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் நிலைமை.

சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டுதான் நடக்கப் போகிறது. அதற்குள் இந்த கட்சியில் இருந்தால் தேற மாட்டோம் என்று நினைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நெல்லை மாவட்ட பொறுப்பாளர் மக்களவை தேர்தலின்போது கட்சியை விட்டு விலகி விட்டார். கட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் கூட இல்லாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மநீம  கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு நெல்லை கேடிசி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யெடியுரப்ப

கூட்டத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் மைக் பிடித்த மாநில துணைத் தலைவரான மகேந்திரன் ’’ஒரு சில நிர்வாகிகள் விலகிக் கொண்டதால் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. 5 முதல் 6 நிர்வாகிகள் தான் விலகி இருக்கிறார்கள். அடுத்த மாதம் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்’’ என்று ஆரம்பித்தார்.

 2021ல் ஆட்சியை பிடிப்பதுதான் நமது இலக்கு. அதற்காக இப்போதே பணியைத் தொடங்க வேண்டும் என உசுப்பேற்றினார். இது மட்டுமல்லாமல் நடிகர் கமலஹாசன் நவம்பர் 7ம் தேதி 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கப் போகிறார் என்றார். ஆனால், யாரும் கைதட்டி வரவேற்கவில்லை என்பது வேறு விஷயம்.