ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி பலி: சுஜித் விவகாரம் அடங்குவதற்குள் நடந்த மற்றொரு சோகம்!

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி பலி: சுஜித் விவகாரம் அடங்குவதற்குள் நடந்த மற்றொரு சோகம்!

சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

50 அடி ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்து பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தைகள் பலியாகும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில்  திருச்சி நடுக்காட்டுபட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

sujith

இந்த விவகாரம் அடங்குவதற்குள் மீண்டும் இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்து கொலைநடுங்க வைத்துள்ளது. ஹரியானா மாநிலம்  கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா கிராமம் உள்ளது. இங்கு 50அடி ஆழ்துளை  கிணற்றில் 5 வயதான  சிறுமி  தவறி விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, சிறுமியை மீட்கும் பணி  மும்முரமாக நடந்து வந்தது. 

ttn

சுமார் 10 மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் மத்தியில் சிறுமிக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்தபட்டு வந்தது. அதேசமயம் மருத்துவக்குழுவினரும் தயார்நிலையில் இருந்தனர்.

 

இந்நிலையில் சிறுமியின் மீட்பு போராட்டம் தொடர்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் சோகமும், பதற்றமும் நிலவி வருகிறது.