ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை! மீட்புப் பணி தீவிரம்

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை! மீட்புப் பணி தீவிரம்

திருச்சி அருகே மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுளது.

திருச்சி அருகே மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுளது.
  
நடுகப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது சுர்ஜித்  என்ற குழந்தை  விழுந்துள்ளது.  அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியில்  தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

baby

ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும்பணி நடைபெற்றுவருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதாகவும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் இருப்பதால் குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுக்கு முன்பு போர்வெல் தோண்டப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட போர்வெல் 5 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.  போர்வெல் மூடப்பட்ட நிலையிலும் மழை பெய்ததால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த பள்ளத்தில்தான் குழந்தை தற்போது விழுந்துள்ளது.