ஆழ்துளைக் கிணற்றில் மழைநீர் தொட்டி அமைத்தால் பணம் வழங்கப்படும்..!

 

ஆழ்துளைக் கிணற்றில் மழைநீர் தொட்டி அமைத்தால் பணம் வழங்கப்படும்..!

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தின் உயிரிழப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தின் உயிரிழப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தமிழகத்தில் தோண்டப்பட்ட அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக முதல்வரும் மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டனர். அதன் பின், தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளாகவும் மாற்றலாம் என்று தமிழக மக்களுக்கு அறிவுறுத்தியது.

sujith

உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் , தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மக்கள் மூட வேண்டும் என்பதற்காகவும் தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

collector

தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமி புரம் கிராமத்தில், செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை எவ்வாறு மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றுவது என்பது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

borewell

அந்நிகழ்ச்சியில் பேசிய பல்லவி பல்தேவ், செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றில் மழை நீர்த் தொட்டி அமைத்தால் ரூ.22 ஆயிரம் வழங்கப்படும் என்றும் திறந்தவெளி கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தால் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.