’ஆழ்துளைக் கிணறுகளை மூடாதீங்க…’ சுர்ஜித் ஏற்படுத்திய விழுப்புணர்வு..!

 

’ஆழ்துளைக் கிணறுகளை மூடாதீங்க…’ சுர்ஜித் ஏற்படுத்திய விழுப்புணர்வு..!

மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றிக்கொண்டால், அக்கம் பக்கம் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு உள்ளது. பயனில்லாத போர்களை அரைகுறையாக மூடுவது தான் பிரச்சனை.

தமிழ்நாட்டின் மகன் நம் எல்லோருடைய விழிப்புணர்வுக்காக அவன் எழா உறக்கம் கொண்டு விட்டான்.தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை விட அதன் ஆபத்தை அறிந்து கொள்ளுவது மற்றும் நம்முடைய அஜாக்கிறதையை களைவதும் தான் மிகவும் முக்கியம். இனி ஒரு தவறு நடக்காமல் குழந்தைகளை காப்பது நம் கடமை.  ஆழ்துழாய் கிணறை இனிமேலும் திறந்து வைக்காதீர்கள். ஆறா ரணமாகிவிட்டது.borewell

போர் வேல் தோண்டுவதற்கு ஒரு விரிவான சட்டம் கொண்டுவரவேண்டும் . பிறகு தோன்றுவதை மேற்பார்வையிட பாஞ்சாயத்து அல்லது மெட்ரோ வாட்டரிடம் பொறுப்பை ஒப்படைக்கவேண்டும். தோண்டிய பிறகு அவர்களிடம் போர் வெல்லின் நிலமைபற்றி பாதுகாப்பிற்கு சான்றிதழ் கொடுக்கவேண்டும். இதெல்லாம் போர்வெல் தோண்டுபவர்களுடைய வேலையாக இருக்கவேண்டும். போர்வெல் தோண்டிய பிறகு மூடாமல் இருந்தாலோ அல்லது பாதுகாப்பற்ற தன்மையில் இருந்தாலோ தோண்டுபவர்கள் மேல் நடவடிக்கையெடுத்து அபாரதமோ அல்லது ஜெயில் தண்டனை கொடுப்பதுபோல சட்டம் இயற்றவேண்டும்.sujith

மேலும் அவர்களுடைய லைசென்ஸை கேன்செல் செய்யவேண்டும். வீடுகட்டும்போது போர் வேல் போட்டால் வீட்டை கட்டும் என்ஜினீயர் அல்லது கான்டராக்டர் பொறுப்பேற்க வேண்டும் இதெல்லாம் செய்யாவிட்டால் இந்தமாதிரி விபரீதங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கும். surjith

பலலட்சம் செலவுசெய்த போர்களை மூடுவதால் பயன் எதுவும் இல்லை, எனவே அவற்றை முறையாக பாதுகாப்பாக மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றிக்கொண்டால், அக்கம் பக்கம் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு உள்ளது. பயனில்லாத போர்களை அரைகுறையாக மூடுவது தான் பிரச்சனை. போருக்கு கைபம்பு அமைக்கிற மாதிரி மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தினால் பாதுகாப்போடு பயனும் ஏற்படும்.