ஆழ்கடலில் தவித்த 7 கேரள மீனவர்களில் நால்வர் கரையேறினர், 3 பேர் இன்னும் காணவில்லை!

 

ஆழ்கடலில் தவித்த 7 கேரள மீனவர்களில் நால்வர் கரையேறினர், 3 பேர் இன்னும் காணவில்லை!

கொல்லம், நீண்டகரா பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஆழ்கடலில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மீனவர்கள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டனர். ஐவரில் இருவர் மட்டும் நீந்தி கரைசேர்ந்தனர், மற்ற மூவர் குறித்து இன்னும் தகவல் ஏதுமில்லை.

திருவனந்தபுரம், விழிஞ்சம் பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 பேர், படகு எஞ்சின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தனர். கனமழை எச்சரிக்கை இருந்ததால், உடனடியாக கரைக்குத் திரும்ப முயற்சித்தும் என்சின் பழுது சரியாகவில்லை. ஒருவழியாக, சனிக்கிழமை மதியம் எஞ்சின் வேலை செய்ய ஆரம்பித்ததால், உடனடியாக நால்வரும் கரை திரும்பினர். அதேபோல், கொல்லம், நீண்டகரா பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஆழ்கடலில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மீனவர்கள் நடுக்கடலில் சிக்கிக்கொண்டனர். ஐவரில் இருவர் மட்டும் நீந்தி கரைசேர்ந்தனர், மற்ற மூவர் குறித்து இன்னும் தகவல் ஏதுமில்லை.

Boats anchored

கனமழை எச்சரிக்கை விடப்பட்டும், படகு உரிமையாளர்கள் மீனவர்களை மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு போகச்சொல்லி வற்புறுத்துவதால்தான் மேற்படி அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன, எனவே படகு உரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி அம்மா தெரிவித்துள்ளார். ஆயினும், மீனவர்கள் காணாமல்போன செய்தி கிடைத்தும் அரசு உடனடியாக  மீட்புப் பணிகளை துவக்கவில்லை எனக்கூறி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஒருகட்டத்தில், அரசை நம்பி பயனில்லை என நினைத்து பத்து படகுகளில் மீனவர்களே மீட்புப்பணிக்காக கடலுக்குள் சென்றனர். இறுதியாக, காணாமல் போன எழுவரில், இன்னும் மூவர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.