ஆள் இல்லை என்று கூறி அபேஸ்! ஆன்லைன் டெலிவரி பாயின் பலே மோசடி

 

ஆள் இல்லை என்று கூறி அபேஸ்! ஆன்லைன் டெலிவரி பாயின் பலே மோசடி

அம்பத்தூர் அருகே ஆன்லைன் ஷாப்பிங் மையத்தில் டெலிவரி செய்ய வேண்டிய பொருட்களை ரகசியமாக திருடி விற்ற டெலிவரி பாய் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பொருட்கள்ளை விநியோகிக்கும் மையம் அமைந்துள்ளது. அங்கு செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், ஜான்சன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். வினோத்குமார் டெவலிவரி செய்யும் பிரிவிலும், ஜான்சன் அலுவலக பிரிவிலும் வேலை செய்து வந்துள்ளனர்.

theif

டெலிவரிக்கு பார்சல்களை எடுத்துச் செல்லும் வினோத் குமார் வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை, வீடு பூட்டியுள்ளது, அட்ரஸ் தவறாக உள்ளது என்று கூறி தினமும் இரண்டு மூன்று பார்சல்களை அலுவலகத்தில் ஒப்படைத்து வந்துள்ளார். அப்படி ரிட்டர்ன் ஆகும் பொருட்களை சேமிப்பு கிடங்கில் தனியாக பாதுகாப்பாக வைப்பார்களாம். 
வினோத் திருப்பிக் கொடுக்கும் பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்ததாக இருந்துள்ளது. அதை ஜான்சன் திருடி வெளியே கொண்டுவந்துவிடுவாராம். அதை விற்று இருவரும் சரி சமமாகப் பங்கு போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் டெலிவரி செய்ய முடியாத பொருட்கள் பல திருப்பி அனுப்பாமல் இருப்பதைக் கண்டு மேலாளர் கமலக்கண்ணன் சந்தேகம் அடைந்துள்ளார். கணக்கெடுத்து பார்த்தபோது பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. 

deleivery

இதைத் தொடர்ந்து அம்பத்தூர் போலீசில் அவர் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் ஜான்சன் மற்றும் வினோத் குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, இருவரும் கூட்டு சேர்ந்து விலை உயர்ந்த  மொபைல் போன்களை திருடி விற்றதை ஒப்பக் கொண்டனர். இப்படி சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான போன்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1.7 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.