ஆளும் அதிகாரத்தின் குரலாக ரஜினி பேசுகிறார்! – வி.சி.க வன்னியரசு டாப் தமிழ் நியூஸ்-க்கு அளித்த சிறப்பு பேட்டி

 

ஆளும் அதிகாரத்தின் குரலாக ரஜினி பேசுகிறார்! – வி.சி.க வன்னியரசு டாப் தமிழ் நியூஸ்-க்கு அளித்த சிறப்பு பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் அதிகாரத்தின் குரலாகப் பேசுகிறார் என்று டாப் தமிழ் நியூஸ் செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தொிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் அதிகாரத்தின் குரலாகப் பேசுகிறார் என்று டாப் தமிழ் நியூஸ் செய்தி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தொிவித்துள்ளார்.

டாப் தமிழ் நியூஸ் செய்தி இணையதளத்துக்காக வன்னியரசுவிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் அவர் கூறியதின் சில முக்கிய பதில்களை மட்டும் இங்கு அளித்துள்ளோம்.

vanni arasu

சி.ஏ.ஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் போராடவில்லை. சி.ஏ.ஏ-வால் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் பாதிப்பு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்குப் பாதிப்பு, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதிப்பு, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு என்ற அடிப்படையில் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். 

இந்த சிஏஏ-வால் இஸ்லாமியர்களுக்கு கூடுதலாக நேரடியான பாதிப்பு உள்ளது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. இந்து ராஷ்டிரத்தை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். அதனால்தான், அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் 55வது சட்டப் பிரிவை மாற்றுகிறார்கள். 

rajini

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்கிறார். இதற்கு முன்பு இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டபோது அவர் குரல் கொடுத்த எந்த ஒரு முன்மாதிரியும் அவரிடம் நாம் காணவில்லை. கடந்த ஜனவரி 21ம் தேதி பெங்களூருவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் செயலாளர் ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில், குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் உள்ளார்கள் என்றார். உடனே, பா.ஜ.க குண்டர்கள் அங்கு சென்று 300 குடியிருப்புக்களை இடித்து தரைமட்டமாக்கினர். சி.ஏ.ஏ-வுக்குப் பிறகு நடந்த சம்பவம் இது.  இன்றைக்கும் 300 இஸ்லாமியர்கள் நிர்க்கதியாக்க நிற்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் குரல் கொடுப்பேன் என்ற ரஜினி அங்கே சென்று நின்றிருக்க வேண்டுமா இல்லையா?

ரஜினிகாந்த்தின் குரல் என்பது மோடி, அமித்ஷா, பா.ஜ.க-வின் குரல். ஆர்.எஸ்.எஸ்-ன் குரல். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வைத் தவிர வேறு யாரும் சி.ஏ.ஏ-வை ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழுக்க ஆர்.எஸ்.எஸ்-காரராக ரஜினி செயல்பட்டு வருகிறார். 

rajini

ரஜினிகாந்தின் பார்வை ஆளும் வர்க்கத்தின், அதிகார வர்க்கத்தின் பார்வையாக உள்ளது. போராடும் மக்கள் எல்லோரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகத்தான் போராடுவார்கள். ஆளும் வர்க்கத்தினர் அதை வன்முறையால் அடக்கி ஒடுக்க முயல்வார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசாரே தீ வைத்ததையும் பிறகு தடியடி நடத்தியதையும் பார்த்தோம்” என்றார்.

rajini

புதிய கல்விக் கொள்கை நேரத்தில் அதற்கான எதிர்க் கருத்தைத்தான் ரஜினிகாந்த் கூறினார். பா.ஜ.க-வுக்கு ஆதரவான நபராக இருந்தால் எப்படி இப்படி ரஜினி கூறியிருக்க முடியும் என்று கேட்ட போது,”புதிய கல்விக் கொள்கை விவாதத்க்கு வரும்போது சூர்யா அளவுக்கு ரஜினி பேசவில்லை. பாடலாசிரியர் கபிலன் கேள்வி எழுப்புகிறார். நீங்கள் பேசினால் நாடு முழுக்க கேட்கும் என்று அவராக ரஜினியை இழுத்தாரே ஒழிய, ரஜினிகாந்த் தானாக வந்து பேசவில்லை” என்றார்.

முழுமையான பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணவும்.