ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் கூடுகிறது !

 

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் கூடுகிறது !

சட்ட சபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.

சட்ட சபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத் தொடர் முடிந்து கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆகவுள்ளது. 6 மாத காலத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டசபை கூடும். 

ttn

ஜனவரி மாதம் சட்டசபை கூட்டப்படும் என்று உறுதியாகி இருந்தாலும், இடையில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடைபெறுவதால் எந்த எப்போது சட்டசபை கூடும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவுகள் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும். அதனையடுத்து, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 6 ஆம் தேதி பதவியேற்பர். ஜனவரி 11 ஆம் தேதி  மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடக்கவுள்ளது. 

ttn

அதனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது ஜனவரி 7 ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும் சட்டமன்ற செயலக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.