ஆளுநரை திடீரென்று சந்தித்த இ.பி.எஸ்… அமைச்சரவையில் மாற்றம்!?

 

ஆளுநரை திடீரென்று சந்தித்த இ.பி.எஸ்… அமைச்சரவையில் மாற்றம்!?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திடீரென்று சந்தித்துப் பேசியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க அமைச்சர்களை கையில் பிடிக்க முடியவில்லை

தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திடீரென்று சந்தித்துப் பேசியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க அமைச்சர்களை கையில் பிடிக்க முடியவில்லை. எப்போதும் தங்கள் வேலை என்னவோ அதில் கராராக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது. மேலும், அடிதடி, வன்முறை சம்பவங்களிலும் அமைச்சர்களின் பெயர் அடிபட்டு வருகிறது. 

edapaadi-palanisamy

கொரோனாவுக்குப் பிறகு பல அமைச்சர்கள் வேலையே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொந்த ஊரிலேயே அவர்கள் தங்கியிருப்பதால் துறை சார்ந்த பணிகள் தேங்கிக் கிடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் வாரத்துக்கு இரண்டு நாட்களாவது அமைச்சர்கள் சென்னையிலிருந்து பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று திடீரென்று எடப்பாடி பழனிசாமி ஆளுநர் புரோஹித்தை சந்தித்துப் பேசினார். கொரோனா பணிகள் பற்றி விளக்க சென்றதாக சொல்லப்பட்டாலும், இந்த சந்திப்புக்கு வேறு காரணம் உள்ளது என்று கூறப்படுகிறது. மூன்று அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிதாக சிலரை அமைச்சராக்க வேண்டும் என்று பரிந்துரை கடிதம் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி தூக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கடலூரில் நடந்த கொலை தொடர்பாக அமைச்சர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
ராஜேந்திர பாலாஜிக்கு பா.ஜ.க ஆதரவு உள்ளது. இதனால் அவரை பதவியில் இருந்து தூக்கும் முடிவுக்கு ஆளுநர் உடன்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.