ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு…. மோடிக்கு தூது விடும் எடப்பாடி?

 

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு…. மோடிக்கு தூது விடும் எடப்பாடி?

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க நேரம் கேட்டு அவரது அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ம் தேதி டெல்லிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.  5 நாட்கள் கடந்தும், அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் எந்த ரெஸ்பான்ஸூம் செய்யாததால், முதல்வர் தரப்பு அப்செட்டாகி உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி இன்று மாலை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க ஆளுநரை முதல்வர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

ஆனால் முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்திக்க வேறு சில காரணங்களும் இருக்கிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். தமிழகத்தில் அதிமுகவின் நிலைமை என்பது மக்களிடையே செல்வாக்கு இழந்துதான் இருக்கிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற பாஜகவுக்கு இருந்த ஒரே வழியான அதிமுகவும் செல்வாக்கு இழந்து இருப்பதால் அக்கட்சியை பாஜக டீலில் விட்டுவிட்டது. அதன் வெளிப்பாடுதான் தொடர்ந்து ரெய்டுகள் அரங்கேறுகிறது.

banwarilal

அதுமட்டுமின்றி அதிமுகவை ஒப்பிடுகையில் டிடிவி தினகரனுக்கு கூட ஓரளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்பதை உணர்ந்த பாஜக மேலிடம் அதற்கான மூவ்களையும் ஆரம்பித்திருக்கிறது. தென் மாவட்டங்களை பொறுத்த வரை தினகரன் – திவாகரனை இணைத்தால் நல்லது என பாஜக நினைக்கிறது, அதனால்தான் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த மோடியின் சகோதரர் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்த கையோடு திவாகரன் மகன் ஜெயானந்த்தையும் சந்தித்து தினகரன் – திவாகரன் இடையே சமரச முயற்சிக்கான முதல் படியை ஆரம்பித்து வைத்தார்.

epsmodi

இதனை எதிர்பார்க்காத அதிமுக பயங்கர மூட் அவுட்டில் இருக்கிறது. இதனால்தான் ஈபிஎஸ் மோடியை சந்திக்க நேரம் கேட்டார் ஆனால் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் மோடியோ அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை. எவ்வளவு முயன்றும் நேரம் கிடைக்காததால்  ஆளுநரை சந்தித்து அவர் மூலம் தூது அனுப்பி நேரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவரை சந்திக்க மாலை செல்கிறார் முதல்வர்.

ஒருவேளை பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காத பட்சத்தில் மோடிக்கு சொல்ல வேண்டிய செய்திகளையும், அளிக்க வேண்டிய உறுதிகளையும் ஆளுநரிடமே அளித்து, தமிழகத்தில் இழந்த செல்வாக்கை அதிமுக நிச்சயம் மீண்டும் பெறும். எனவே அதிமுகவை பாஜக டீலில் விடவேண்டாம் என வேண்டுகோள் வைப்பார். 

palanisamy

மேலும், ஓபிஎஸ் டிடிவி தினகரனை கடந்த வருடம் சந்தித்தார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியதால் அதிர்ச்சி அடைந்திருக்கும் ஈபிஎஸ், ஒருவேளை பாஜக ஓபிஎஸ், தினகரனை இணைப்பதற்காக சில மூவ்களை செய்திருக்கிறதோ என்ற அச்சத்திலும் இருக்கிறார். அதுமட்டுமின்றி 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு தமக்கு பாதகமாக வந்து ஆட்சி கலையும் சூழல் ஏற்படும் அப்போது நிச்சயம் பாஜகவின் துணை தனக்கு வேண்டும். எனவே பாஜகவின் நிழலில் இருப்பதுதான் தற்போது தமக்கு சேஃப். இல்லையென்றால் தொடர்ந்து ரெய்டுகள் அரங்கேறும் எனவே ஆளுநரை சந்தித்து அவர் மூலம் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கியோ இல்லை தூது அனுப்பியோ பாஜக நிழலில் இருக்கவே ஆளுநருடனான இந்த ஈபிஎஸ் சந்திப்பு என்கிறார்கள் விவரமாக.