ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சிவசேனா!

 

ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சிவசேனா!

ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்காத மகாராஷ்டிரா மாநில ஆளுநரின் செயலை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வரும்படி சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்புவிடுத்திருந்தார். ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதங்களுடன் வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சிவசேனா கேட்டது.

ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்காத மகாராஷ்டிரா மாநில ஆளுநரின் செயலை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வரும்படி சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்புவிடுத்திருந்தார். ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடிதங்களுடன் வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சிவசேனா கேட்டது. ஆனால், கால அவகாசம் அளிக்க மறுத்த ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசும் இதை ஏற்று குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், மகாராஷ்டிரா மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும்.

shiv sena

ஆளுநரின் இந்த செயலைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தாக்கல் செய்துள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அனில் பிரதாப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஆட்சி அமைக்க ஆதரவு கடிதங்கள் அளிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டோம். சட்டமன்றத்தில் எங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்று கூறினோம். ஆனால், இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். கூடுதல் அவகாசம் அளிக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். சிவசேனாவுக்காக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராக உள்ளார்” என்றார்.