ஆளுங்கட்சி அமைச்சருக்கு ஜெர்க்!அப்பாவி ஜனங்க கதி…அதோகதிதானா!?

 

ஆளுங்கட்சி அமைச்சருக்கு  ஜெர்க்!அப்பாவி ஜனங்க கதி…அதோகதிதானா!?

தமிழக அமைச்சர் ஒருவரின் மகன் வீட்டிலிருந்து  50 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல்: தமிழக அமைச்சர் ஒருவரின் மகன் வீட்டிலிருந்து  50 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

srinivasan

எடப்பாடி  பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறுபவர். சில சமயங்களில் மேடைகளில் இவர் உளறும்  வார்த்தைகளும் சரி, இவர் செய்யும் அட்ராசிட்டியும்  சரி சமூகவலைதளங்களில்   வைரலாகிவிடும். அதனால் தான் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூட ஒருமுறை, திண்டுக்கல் சீனிவாசன் பேசினால் நேரம் போவதே தெரியாது என்று கூறியிருந்தார் என்றால் பாருங்களேன்.

dindugal-srinivasan

சரி விஷயத்துக்கு வருவோம். அமைச்சர் சீனிவாசனின் இளையமகன் வெங்கடேசன், திண்டுக்கல்லில் மெண்டோசா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவர் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர்  சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின்  பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

crime

ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரின் மகன் வீட்டிலிருந்தே நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம்; நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு!