ஆளாளுக்கு பேசாதீங்க… அடக்கிவாசிங்க… அமைச்சர்களிடம் கத்திக்குமுறிய எடப்பாடி..!

 

ஆளாளுக்கு பேசாதீங்க… அடக்கிவாசிங்க… அமைச்சர்களிடம் கத்திக்குமுறிய எடப்பாடி..!

கூட்டணி கட்சிகள் குறித்தும், ரஜினி குறித்தும், கடுமையாக விமர்சித்த அமைச்சர்களை, அடக்கி வாசிக்கும்படி, முதல்வர் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் ஆளாளுக்கு வரைமுறையின்றி பேசுவதால் அதிமுக வட்டாரம் குழப்பமடைந்து வந்தது. முதல்வர் எடப்பாடி அமைச்சர்களை தனித்தனியே அழைத்து நீண்ட நேரம் பேசியது, அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.

edappadi

சமீபகாலமாக, அமைச்சர்கள், ஒரே விவகாரத்தில், வெவ்வேறு கருத்துக்களை தெரிவிப்பது, அனைத்து தரப்பினரையும் குழப்பி வருகிறது.ஒவ்வொருவரும் இஷ்டத்திற்கு பேசுவது, முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடியும், ஓ.பிஎஸும் தலைமைச் செயலகத்தில்,  ஆலோசனை நடத்தினர். துணை முதல்வர் சென்ற பின், அமைச்சர்கள் ஒவ்வொருவரையும், தனித்தனியே அழைத்து, முதல்வர் பேசினார். இந்த சந்திப்பு, இரவு வரை தொடர்ந்தது. 

சந்திப்பின்போது, அமைச்சர்களில் சிலரை முதல்வர் கண்டித்துள்ளார். கூட்டணி கட்சிகள் குறித்தும், ரஜினி குறித்தும், கடுமையாக விமர்சித்த அமைச்சர்களை, அடக்கி வாசிக்கும்படி, முதல்வர் கூறியுள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அமைச்சர்கள் சார்ந்த மாவட்டங்களில், முழுமையான வெற்றி பெற என்ன செய்வது; கூட்டணி கட்சிகளுக்கு, எவ்வளவு சீட்களை வழங்குவது; நம்மை விமர்சிக்கும் கட்சிகளை கழற்றி விடலாமா; குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தலாமா, வேண்டாமா? பட்ஜெட்டில் புதிதாக எதை அறிவிக்கலாம் என்றெல்லாம், கருத்து கேட்டுள்ளார்.

edappadi

அமைச்சர்களை, முதல்வர் தனித்தனியே அழைத்து பேசியது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. சில அமைச்சர்களிடம் கூடுதலாக உள்ள துறைகளுக்கு, புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சில அமைச்சர்களின் துறைகளை மாற்றவும், முதல்வர் திட்டமிட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது.