ஆல்யா மானஸாவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சீவ்

 

ஆல்யா மானஸாவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சீவ்

நடிகை ஆல்யா மானஸா பிறந்தநாளுக்கு நடிகர் சஞ்சீவ் 24 வகையான பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். 

சென்னை: நடிகை ஆல்யா மானஸா பிறந்தநாளுக்கு நடிகர் சஞ்சீவ் 24 வகையான பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர். அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூட செய்து வைத்தனர். 

alya

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடிகை அல்யா மனஸாவுக்கு தனது 26வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது நடிகரும், அல்யாவின் காதலருமான சஞ்சீவ், அல்யா மனஸாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கும் போவதாகக் கூறி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதையொட்டி இருவரும் சேர்ந்து ஒரு நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் விழாவை நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சஞ்சீவ் தனது காதலி அல்யாவிற்கு 24 விதமான பொருட்களை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.