ஆலயங்களில் கொடிமரம் சொல்லும் தத்துவம் என்ன?

ஆலயங்களில் கொடிமரம் சொல்லும் தத்துவம் என்ன?

ஊரில் இருக்கிற கட்சி கொடி கம்பங்கள் எல்லாம் பத்தாது என்று எல்லா கோயில்களிலும் ஏன் கொடிக் கம்பம் வைத்திருக்கிறார்கள் என்று என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் ஆலயங்களில் இருக்கும் கொடிக் கம்பங்களின் பின்னால் மிகப் பெரிய தத்துவங்கள் ஒளிந்திருக்கின்றன. இவற்றின் தாத்பர்யம் புரிந்துக் கொண்டு ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபட்டால் உண்மையிலேயே பக்தி எளிமையாகும்.

kodimaram

ஒவ்வொரு விஷயத்தையும் மிக கவனமுடனும், அர்த்தமுடனும் வகுத்து வைத்திருக்கிறார்கள். பொதுவாக அனைத்து ஆலயங்களிலுமே கொடிமரத்துக்குக் கீழ் அந்த தெய்வத்திற்குரிய வாகனம் இருக்கும். அப்படி வீற்றிருக்கும் வாகனம் நம் ஆன்மாவை உணர்த்துகிறது. அடுத்தமுறை ஆலயத்திற்கு செல்லும் போது இதையெல்லாம் உற்று கவனித்துப் பாருங்கள். அப்படி கொடிமரத்தில் இருக்கும் வாகனம் தெய்வத்தைப் பார்த்தப்படியே இருக்கும். நம் ஆன்மாவும் தெய்வத்தை பார்த்தப்படி இருக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. 

kodimaram

நம் உடலுள் இருக்கும் குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொடி மரத்தில் வளையங்கள் இருக்கும். இப்படி 32 வளையங்கள் கொடிமரத்தில் இருக்கும். நம் உடலின் முதுகு எலும்பில் இப்படி மொத்தம் 32 எலும்புகள் இருக்கின்றன. இவற்றைக் குறிப்பதற்காகவே கொடிமரத்தில் 32 வளையங்கள் உள்ளன. அதனால் தான் ஆலயங்களில் தரிசனத்தின் போது முதுகுத் தண்டை நேராக வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை இன்னொரு விதமாகவும் உணரலாம். எல்லோருக்கும் 32வது வயதில் த் தானே விஸ்டம் டூத் எனப்படும் அறிவு பல் முளைக்கிறது. அதைத் தானே ஞான பல் என்கிறோம். அடுத்த முறை இதையெல்லாம் உணர்ந்து முதுகுத் தண்டை நேராக வைத்து கொடி மரத்தை வணங்குங்கள்.