ஆற்றில் சிக்கி மூன்று சிறுமிகள் பலி: கிருஷ்ணகிரியில் தொடரும் உயிரிழப்புகள்!

 

ஆற்றில் சிக்கி மூன்று சிறுமிகள் பலி: கிருஷ்ணகிரியில் தொடரும் உயிரிழப்புகள்!

காப்பகம் நடத்தி வரும் சகுந்தலா என்பவர், காப்பகத்தில் வசிக்கும் 5 மாணவிகளை கங்கமடு என்ற பகுதியில் உள்ள தோட்டத்துக்குக் காலாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில், காப்பகம் நடத்தி வரும் சகுந்தலா என்பவர், காப்பகத்தில் வசிக்கும் 5 மாணவிகளை கங்கமடு என்ற பகுதியில் உள்ள தோட்டத்துக்குக் காலாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது  சிறுமிகள் 5 பேரும் பக்கத்தில் உள்ள குப்தா ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.  

River

சிறிது நேரம் கழித்துக் குளிக்கச் சென்ற மாணவிகளில் அனுஷ்கா, ஜெசுப்பிரியா, சித்ரா ஆகிய மூன்று சிறுமிகளையும் காணவில்லை என்பது தெரிந்தவுடன் சகுந்தலா அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகே இருந்தவர்கள் உதவியை நாடி, அந்த மூன்று மாணவிகளைத் தேடச் சொன்னதில் அந்த 3 சிறுமிகளும் ஆற்றில்  சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார் அவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்று விசாரித்து வருகின்றனர்.

இதுவரை கிருஷ்ணகிரியில் மட்டுமே, கடந்த 8 நாட்களில் 11 சிறுவர் மற்றும் சிறுமியர் ஏரிகளிலும் ஆறுகளிலும் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.