ஆற்றில் குப்பைக் கொட்டிய வாகனத்தை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் !

 

ஆற்றில் குப்பைக் கொட்டிய வாகனத்தை மடக்கிப் பிடித்த இளைஞர்கள் !

குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் தூய்மையான காற்றைச் சுத்தப்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான திருத்தணி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் அந்த கோவிலில் இருந்து தினமும், 25 டன் குப்பை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த கோவிலிலிருந்து சேகரித்த குப்பைகளை, முறையாகக் குப்பைக் கொடுக்கும் இடங்களில் கொட்டாமல் அப்பகுதியில் இருக்கும் நந்தி ஆற்றங்கரையில் நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த ஆற்றில் உள்ள தண்ணீர் மாசடைந்து, குப்பை கூளமாகக் காட்சியளிக்கிறது. 

tttn

அந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் தூய்மையான காற்றைச் சுத்தப்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளில் இருக்கும் கால்நடைகளும் அந்த நீரைத் தான் பருக வேண்டும் என்ற சூழல் நிலவுவதால் அவைகளுக்கு நோய்ப் பாதிப்பும் ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

tttn

இந்நிலையில், நேற்று திருத்தணி கோவிலில் இருந்து நந்தி ஆற்றில் கொட்டுவதற்காக நகராட்சி ஊழியர்கள் வந்துள்ளனர். அந்த வாகனத்தைச் சிறைபிடித்த அப்பகுதி மக்கள், இனிமேல் இங்கு குப்பைக்கொட்டக் கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

தகவல் அறிந்து விரைந்து சென்ற நகராட்சி அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இனிமேல் இங்குக் குப்பைக் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அதன் பிறகு, சிறைபிடித்த வாகனத்தை இளைஞர்கள் கொடுத்துவிட்டு போராட்டத்தைக் கைவிட்டனர். 

.