ஆற்றங்கரையோரம் குளிக்க, துணி துவைக்கச் செல்ல வேண்டாம் : சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

 

ஆற்றங்கரையோரம் குளிக்க, துணி துவைக்கச் செல்ல வேண்டாம் : சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல வனவிலங்குகள் இருக்கின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல வனவிலங்குகள் இருக்கின்றன. இவை அடிக்கடி அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை நாசப்படுத்தியும் அங்கிருக்கும் கால்நடைகளை வேட்டையாடியும் வருகின்றன.

tt

அதனால் அக்கிராம மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இதே போலக் கடந்த வாரமாக செண்பகபுதூர் மேட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்  அதிகமாக இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அரியப்பம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் ஒருவர்  சிறுத்தை ஊருக்குள் புகுந்ததைப் பார்த்துவிட்டு, உடனே அந்த கிராம மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ttn

இதனை ஊர்மக்கள் வனத்துறையினரிடம் தெரிவிக்க, அங்குச் சென்ற அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த சிறுத்தை எந்த வழியாகச் சென்றுள்ளது என்று கண்டுபிடித்தனர். அதில், சிறுத்தை ஊருக்குள் தான் புகுந்துள்ளது என்று உறுதி செய்யப்பட்டதால், பொதுமக்கள் மறைவான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பவானி ஆற்றங்கரையோரம் குளிக்க, துணி துவைக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.